காத்தான்குடி அனைத்துப் பாடசாலைகளிலும் இது முற்றிலும் தடை!!

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பொலிதீன் பாவனையை முற்றாகத் தடை செய்யத் தீர்மானித்துள்ளதாக, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஊடகங்களுக்கு (23) கருத்துத் தெரிவித்த அவர், “காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பொலிதீன் பாவனையைத் தடை செய்யத் தீர்மானித்துள்ளோம்” என்றார்.

அதேபோன்று, காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரைத் தற்காலிகமாக மூடுமாறும், சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், மாணவர்களின் சுகாதார நலன்களைக் கவனத்திற்கொண்டு, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாடசாலையிலுள்ள சிற்றுண்டிச்சாலைகள், காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பரீசிலிக்கப்பட்டு, அவர்களின் சுகாதார அறிக்கையைப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் பாவிக்க வேண்டிய உணவுகளையே பயன்படுத்த வேண்டும் என்ற அரச சுற்றறிக்கைக்கு ஏற்பட சிற்றுண்டிச் சாலைகளை ஒழுங்குபடுத்திய பின்னர், அவற்றைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor