மனித நுகர்விற்கு ஒவ்வாத வெங்காயம் மீட்பு!!

எகிப்தில் இருந்து இறங்குமதி செய்யப்பட்டுள்ள மனித நுகர்வுக்குப் பொருந்தமற்ற ஒரு தொகை பெரிய வெங்காயங்கள், தம்புளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் தரித்துநின்ற கொள்கலனிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

பொருளாதார மத்திய நிலையத்திக்குப் பின்புறமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொள்கலனில் வைத்து, பெரிய வெங்காயங்களை விற்பனை செய்ய முயற்சித்த வேளை, தம்புளை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு, தம்புளை பொலிஸ் சுற்றாடல் பிரிவினர் இதனைப் கைப்பற்றியுள்ளனர்.

தம்புள்ளை மாநகர சபையின் மேயர் ஜாலிய ஓபாதவின் ஆலோசனைக்கமைய, தம்புளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில், பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு என்பன அனுமதியின்றி விற்பனை செய்யப்படுகின்றமைத் தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொள்கலனிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளதுடன், வெங்காயம் அழுகி அதிலிருந்து நீர் வெளியேறியவாறு காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வெங்காயத் தொகையானது, கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே கொண்டு வந்துள்ளதாகவும் எவ்வித அனுமதிப்பத்திரமோ வர்த்தக நிலையத்தின் உரிமமோ இல்லாத நிலையில், கொள்கலனில் வைத்து விற்பனை செய்வதற்காகவே இவைக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த பெரிய வெங்காயம், துறைமுகத்தில் எவ்வித சோதனைகளுமின்றி வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பண்டிகைக் காலத்தில் மக்களை ஏமாற்றி விற்பனை செய்வதற்காக, வெங்காயம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தம்புள்ளை மாநகர சபையின் மேயர் ஜாலிய ஓபாத, பாகிஸ்தானிலிருந்து பல வர்த்தகர்கள் தம்புளைக்கு வருகைத் தந்து, இரகசியமாக பொருளாதார மத்திய நிலையத்தின் பின்புறமாக உள்ள வீதியைப் பயன்படுத்தி உருளைக்கிழங்கு, வெங்காய விற்பனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

எனவே இன்றிலிருந்து (23) பிரதான வீதிகளில் இவ்வாறான விற்பனை நடவடிக்கைகளை தடைசெய்துள்ளதாகவும் இதற்காக பொலிஸ் குழுக்கள், நகரசபையின் விசேட பரிசோதனை அதிகாரிகள் குழுவொன்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor