
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த 19ஆம் திகதி அமைச்சர் சம்பிக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, அவருக்கு பிணை வழங்குமாறு கோரியிருந்தார். பிணை கோரிக்கை தொடர்பான முடிவை இன்று அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
அதற்கமையவே பிணை இன்றையதினம் பிணை வழங்கப்பட்டது.
இராஜகிரியவில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.