
வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் செயலாளராக எஸ்.சத்தியசீலன் ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.
ஆளுநரின் செயலாராகக் கடமையாற்றிய இளங்கோவன் கல்வி அமைச்சின் செயலராக இடமாற்றப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து, புதிய செயலாளராக சத்தியசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.