பண்டிகை காலத்தில் பாதுகாப்பு உறுதி.

எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முப்படை மற்றும் பொலிஸார் இதற்கு தேவையான ஆகக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனரென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி பாதுகாப்பு பேரவை கூட்டத்தின்போது தமக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்