ரிலீசுக்கு நாள்குறித்த கடாரம் கொண்டான் படக்குழு!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் திரைப்படத்தின் அப்டேட்டுகளுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.

இப்படத்தில் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி ஹாசன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். ராஜ்கமல் ஃப்லிம்ஸ் நிறுவனமும், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.

விக்ரமும் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டார். இந்நிலையில், இப்படத்தை ஜூலை 19ஆம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் இறுதிகட்ட பணிகள் சரியாக நடந்துகொண்டிருப்பதால் ஜூலை 19ஆம் தேதியன்று படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 3ஆம் தேதியன்று படத்தின் ட்ரெய்லரும் வெளியாகுமென்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

மேலும், ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் விக்ரமும் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஸ்ரீனிவாஸ் குதாவும், படத்தொகுப்பு பணிகளை கே.எல்.பிரவீனும் கையாண்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor