
ஓட்டமாவடி பிரதான ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது பாலத்தின் மட்டத்துடன் நீர் பரவி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மீண்டும் மழை பொழிய தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் அனைத்திலும் வெள்ள நீர் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் குடியிருப்புக்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் மன்னப்பிட்டியில் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்வதனால் அவ்வீதி ஊடான பிரதான போக்குரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரியவருகிறது.
மழை நீரை விட அதிகளவான காட்ட வெள்ளம் பெருக்கெடுப்பதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாது கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் வெள்ள நீரை கடல் உள்வாங்குவது மிக குறைவாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
வெள்ளம் கட்டுக்கடங்காது அதிகரிக்குமாக இருந்தால் மட்டக்களப்பிற்கான தரைவழிப் பாதை முற்றாக துண்டிக்கப்படும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது