
சவுதி அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாகவே பாகிஸ்தான் இஸ்லாமிக் உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிக் உச்சி மாநாட்டில் மலேசியப் பிரதமர் பின் முகமத் மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகனுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்துகொள்ள இருந்தார்.
எனினும் இறுதி உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் கலந்துகொள்ளமால் அதனை புறக்கணித்திருந்தது.
இந்தநிலையில் சவுதியின் பொருளாதாரத் தடை மிரட்டல் காரணமாகவே பாகிஸ்தான் இஸ்லாமிக் உச்சி மாநாட்டிலிருந்து வெளியேறியதாக துருக்கி ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளை சவுதி மிரட்டுவது முதல் முறை அல்ல எனவும் இதற்கு முன்னரும் சவுதி மிரட்டியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்டார், ஈரான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு துருக்கி சர்வதேச விவகாரத்தில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்