காவல்துறையினரை கடித்துக்குதறிய தந்தை..!!

நபர் ஒருவர் தீயணைப்பு படையினரை தாக்கியும், காவல்துறையினரை கடித்தும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Fontenay-le-Fleury (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. 12 வயதுடைய சிறுமி ஒருவர் மகிழுந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்துள்ளனர். ஆனால் மகளை தூக்கிய தந்தை அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

தீயணைப்பு படையினர் தலையிட அவர்களை அவமதித்து தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளார்.

சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். அவர்கள் குறித்த தந்தையை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் காவல்துறையினரை தள்ளி விழுத்தியதோடு, அவர்களை கடித்தும் உள்ளார்.

இச்சம்பவத்தில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மேலதிக விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை


Recommended For You

About the Author: Editor