
15 வயதுடைய சிறுமி ஒருவர் கொலை குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி ஒருவர் தனது தாயின் துணைவரை கத்தியால் சரமாதியாக குத்தியுள்ளார். நேற்று சனிக்கிழமை காலை இச்சம்பவம் Saint-Raphaël, (Var) நகரில் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை 2 மணிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு 38 வயதுடைய நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அக்கொலையை குறித்த நபருடைய காதலியின் 15 வயது மகள் மேற்கொண்டுள்ளார். தனது தாயை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், மிக நீண்ட நாட்கள் இது போல் நடந்ததாகவும் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாகவும் குறித்த சிறுமி தெரிவித்தார். அவரே தான் தீயணைப்பு படையினரை அழைத்திருந்தார்.
பின்னர் 15 வயதுடைய குறித்த சிறுமி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தற்போது அவர் மேலதிக விசாரணைகளுக்காக Saint-Raphaël காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
உடற்கூறு பரிசோதனைகளுக்குப் பின்னர் விசாரணைகள் தொடரும் என அறிய முடிகிறது.