குழிக்குள் சிக்கிக்கொண்ட இளைஞனை மீட்ட தீயணைப்பு படையினர்..!!

இரும்பு துளை ஒன்றுக்குள் சிக்கிக்கொண்ட இளைஞன் ஒருவரை பலமணிநேர போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் Nîmes நகரில் இடம்பெற்றுள்ளது.
இங்குள்ள kiosk இரும்பு துளை ஒன்றுக்குள் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார். தலைகீழாய் சிக்கிக்கொண்ட அவ் இளைஞனின் கால்கள் மாத்திரம் வெளியே நீட்டிக்கொண்டு இருந்துள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி அளவில் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
குறித்த இளைஞன் காலை 8 மணியில் இருந்து அதற்குள் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தீயணைப்பு படையினர் குறித்த இரும்பு துளையை வெட்டி அகற்றி இளைஞனை மீட்டுள்ளனர். மூன்று மணிநேரங்களின் பின்னர் இளைஞர் மீட்கப்பட்டார்

Recommended For You

About the Author: Editor