ரஷ்யா நோக்கி பூமியின் காந்த வடதுருவம் நகர்வதாக தெரிவிப்பு!

பூமியின் காந்த வடதுருவம், ரஷ்யா நோக்கி வேகமாக நகர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க விஸ்கன்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞானி பிராட் சிங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பூமியின் காந்த வடதுருவத்தின் அமைவிடம், கடந்த 1831ஆம் ஆண்டு முதல் கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் இருந்து ரஷ்யா நோக்கி, வேகமாக இடம்பெயர்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

அண்மைக் காலங்களில், ரஷ்யாவின் சைபீரியா நோக்கி, ஆண்டுக்கு சராசரியாக, 54.7 கி.மீ., வேகத்தில் இது நகர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2020ஆம் ஆண்டுக்கான உலக காந்த மாதிரி தகவல்படி, காந்த வட துருவ பாதை அடுத்த சில ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் தான் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor