
10 வருடங்கள் தாண்டிய பிறகும் ஆடல், பாடல், காதல் என்று நடித்துக்கொண்டு இருக்க முடியாது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களைதான் தேர்வு செய்யவேண்டும் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தனது சினிமா அனுபவங்களை இரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சினிமாவில் கதை மிகவும் முக்கியம். கதாநாயகிக்கு முக்கியதும் அளிக்கும் திரைப்படங்களை தேர்வு செய்யவேண்டும். எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த கதைகளில் நடிக்க வேண்டும்.
நான் தற்போது நடித்து வரும் ‘ஓபேபி’ கதை எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த வகையில்தான் அமைந்திருக்கிறது. விரைவில் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.