
முபாடாலா உலக டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
தோள்பட்டை காயம் காரணமாக நீண்டகாலம் விளையாடாமல் இருந்த ஷரபோவா, 2019-இல் மொத்தமாக 15 போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்தார்.
இந்நிலையில் அபுதாபியில் நடைபெற்று வரும் முபாடாலா போட்டியில் பங்கேற்ற அவர் ஆரம்பத்தில் அவுஸ்ரேலிய வீராங்கனை அஜிலாவை 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.