இன்புளுவன்சா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு

சீரற்ற காலநிலையினால் சில பிரதேசங்களில் இன்புளுவன்சா வைரஸ் நோய் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதிற்கு குறைந்த குழந்தைகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த நோயினால் கடுமையான பாதிக்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காய்ச்சல், சளி போன்றன இந்த நோயின் அறிகுறிகளாக காணப்படுகின்ற நிலையில் குறித்த வைரஸ் தாக்கத்தை குறைப்பதும் நோய் தோற்றுவதை கட்டுப்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்படுமிடத்து உடனடியாக வைத்தியரை நாடி சிகிச்சை பெற வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் பிரியங்கர ஜயரட்ன கேட்டுக் கொண்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்