
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் இருந்து தப்பி வேறு மறைவிடங்களுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதனை இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்நிலையில் மகேந்திரனை மீள இலங்கைக்கு அழைத்து வர சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதன் சட்ட செயன்முறை தொடர்வதாகவும் வாசுதேவ நாணயக்கார இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.