சுவரோவியம் வரைந்து, அழகுபடுத்துவோருக்கு அரச விருது – மகிந்த!!

இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் தங்கள் நேரத்தை செலவிட்டு தன்னார்வமாக நகரங்களை அலங்கரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களை கௌரவிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய குறித்த இளைஞர், யுவதிகளுக்கு அரசாங்க மட்டத்தில் விருது வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளளார்.

இந்த இளைஞர்கள் தான் விரும்பும் பல்வேறு ஓவியங்கள் வரைந்திருந்ததனை தான் அவதானித்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அவர்களை கௌரவப்படுத்துவது தனது மாத்திரமின்றி அனைவரதும் பொறுப்பு என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விருதை வழங்குவதற்காக குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாகவும் வெகு விரைவில் அதனை முன்னெடுப்பதற்கு உரிய பிரிவுகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor