
கடும் வெள்ள அபாய எச்சரிக்கை நிலவுவதால் Corsica தீவின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
பிரான்சின் தென் கிழக்கு பிராந்தியங்கள் மற்றும் Corsica தீவில் நிலவி வரும் கடும் புயல் மற்றும் மழை காரணமாக பல மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் Corsica தீவில் உள்ள Ajaccio விமான நிலையம் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளது. ஓடுதளங்கள் அனைத்திலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், கடும் புயலும் வீசி வருகின்றது.
Air Corsica தலைமைச் செயலகமும் மூடப்பட்டுள்ளது. இத்தீவிற்கு Météo France நாளை ஞாயிற்றுக்கிழமை வரை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.