
நாளை ஞாயிற்றுக்கிழமை சிறுவர்களுக்காக சிறப்பு TGV சேவைகள் இயக்கப்பட உள்ளன.
முன்னர் 5,000 சிறுவர்களுக்கான பயண கிருஸ்துமஸ் விடுமுறை பயணம் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இது பயணிகளிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், நாளை சிறுவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 4 வயது தொடக்கம் 14 வரையான 5,000 சிறுவர்கள் நாளைய தினம் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசில் இருந்து Rennes, பரிசில் இருந்து Nantes, பரிசில் இருந்து Bordeaux, பரிசில் இருந்து Lyon, பரிசில் இருந்து Marseille, பரிசில் இருந்து Strasbourg
பரிசில் இருந்து Lille ஆகிய நகரங்களை இந்த சிறப்பு TGV இணைக்கின்றது.
மொத்தமாக 14 சிறப்பு தொடருந்துகள் இயக்கப்பட உள்ளன. டிசம்பர் 22 ஆம் திகதி நாளை இவை பயணப்பட உள்ளன.