கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் விராட் கோலி.

விராட் கோலி சமீபத்தில் வெளியான ஃபோப்ஸ் பத்திரிகையின் பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமின் ரிச் லிஸ்டிலும் 23 வது இடத்தை பிடித்திருந்தார்.

இதை தவிர்த்து கிரிக்கெட் விளையாட்டிலும் பல சாதனைகளை தன்வசம் கொண்டிருக்கும் ரியல் நாயகன்.

இப்படி பல பரிணாமங்களைக் கொண்ட விராட் இவை எல்லாம் ஒன்றுமே இல்லை என ஒரே வீடியோவில் உணர்த்தியிருக்கிறார்.

சாதாரண மனிதனாக ஆதரவற்றக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் அழகுதான் உண்மையிலேயே பலரது ரசிகராக அவர் இடம் பிடித்திருப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

விராட்டிற்கு குழந்தைகள் மீது பற்று அதிகம். குறிப்பாக அவர்களோடு இணைந்து தெருவில் கிரிக்கெட் விளையாடுவது என்பது அவருக்கு கொள்ளை பிரியம்.

இதை அவரே பல நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். அப்படி அவர் விளையாடிய வீடியோக்களும் வைரலாகியுள்ளது.

கோலி கர்நாடகாவில் இருக்கும் ‘Children’s Shelter Home’ என்கிற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்.

அந்த வீடியோவில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் கேட்கும் பொருட்களை கோலியே கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று அவர்களுக்கு பரிசளிக்கிறார்.

இறுதியாக விராட் கோலியை பார்க்க வேண்டும் என்கிற அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேடத்தைக் களைந்துவிட்டு அவர்கள் முன் தோன்றுகிறார்.

உண்மையிலேயே அதுதான் அந்த குழந்தைகளுக்கு பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் அவரை ஓடிச் சென்று அனைத்துக் கொள்ளும் தருணம் நெகிழ வைக்கிறது.

வீடியோவின் இறுதியில் அதுதான் என்னால் மறக்கமுடியாத சிறப்பான தருணம் என்று கூறுகிறார்.இந்த வீடியோ சமூகவலைதங்களில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பகிர்ந்த அடுத்த நிமிடமே வேகமாகப் பரவத் தொடங்கியது.

இதயத்தை தொடும் இந்த வீடியோ குழந்தைகள் கூட அப்பழுக்கில்லா அன்புடன் கோலியை அணுகும் அந்த தருணம் விராட்டின் ரசிகர்களால் கொண்டாட வைக்கிறது.


Recommended For You

About the Author: Editor