வன்முறை இல்லாத இதயம் வேண்டும் – பார்த்திபன்

வன்முறை இல்லாத இதயம் இப்போது வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் “ஒத்த செருப்பு” திரைப்படத்திற்காக விருது பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.  விருதினை பெற்றுக்கொண்ட அவர், மேடையில் கருத்து தெரிவிக்கையில்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  ‘இந்த விருது நாளைய இயகுனர்களுக்கான விருதாக நான் பார்க்கிறேன்.முக்கியமாக பதிவு செய்யப்பட வேண்டிய விஷயம்,  பிரிவினை இல்லாத இந்தியா,  வன்முறை இல்லாத இந்தியாதான் இப்போது முக்கியம். மாணவர்களின் முயற்சியை நசுக்க கூடாது’ எனத் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்