
இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்டவர்களுள் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், பொது நிர்வாக அதிகாரிகள், நீதிமன்ற எழுத்தாளர்கள் போன்றோரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.