சீமானுக்கு கைலாசாவில் குடியுரிமை – நிபந்தனை விதித்தார் நித்தி.

மான் அரசியலை விட்டு விலகி, மீனாட்சியின் பாதத்தை வணங்கினால் கைலாசாவில் குடியுரிமை வழங்க தயார் என நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது குடியுரிமை பறிக்கப்பட்டால், தான் நித்தியானந்தாவின், கைலாசா நாட்டிற்கு சென்று இராணுவ அமைச்சராகி விடுவேன் என அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சீமானை, கைலாசா நாட்டிற்குள் அனுமதிக்க நித்தியானந்தா சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

ஸ்ரீகைலாசா ஒன்றும் திறந்த மடம் அல்ல என்றும் தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க என்று ஆரம்பத்தில் கொந்தளித்துள்ள நித்தியானந்தா,

சீமான் அரசியலை விட்டு விலகி, திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி விட்டு, மீனாட்சியின் பாதம் வணங்கினால், குடியுரிமை வழங்க தயார் என நிபந்தனை வித்தித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்