அரசியல் கைதிகளுக்கான போராட்டம்

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்  கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று  முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பேருந்து நிலையம் முன்பாக இப் போராட்டம் நடைபெற்றது. 

இதன் போது அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தமிழர்களைக் கொல்லாதே, சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளின் மருத்துவத்தில் சிறைச்சாலை நிர்வாகமே அசமந்தம் காட்டாதே போன்ற கோசங்களை எழுப்பியவாறும் மேற்படி கோசங்களை பதாகைகளில் தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அக் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஷ், கட்சியின் மகளீர் அணித் தலைவி உட்பட கட்சியின் உறுப்பினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: ஈழவன்