
இத்தாலியில் நடந்த உள்ளுர் கால்பந்தாட்டப் போட்டியில் ரொனால்டோ அடித்த கோல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லுய்கி ஃபெராரிஸ் மைதானத்தில் சாம்ப்டோரியா அணிக்கும் ஜூவன்டஸ் அணிக்கும் இடையே கால்பந்தாட்டப் போட்டிகள் நடந்தன. அப்போது இரு அணிகளும் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
இதனைக் கண்ட ஜூவன்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிராளிக்கு மேலாக வந்த பந்தை சுமார் 8 அடி உயரத்திற்கு எம்பிக் குதித்து தலையால் தட்டி கோல் அடித்தார்.
அசாதாரணமான இந்த நிகழ்வின் போது ரொனால்டோவின் தலையில் பட்ட பந்து கோல் கம்பத்திலிருந்து சில அங்குல தூரத்தில் துல்லியமாக நுழைந்தது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.