பிரபாகரன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டாராம். – மைத்திரி கூறுகிறார்.

மரணதண்டனை அமுல்படுத்தினால் ஜீ எஸ் பி ப்ளஸ் சலுகை ரத்துச் செய்யப்படுமென்று இறையாண்மை உள்ள எமது நாட்டை ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கிறது. இது நல்லதல்ல. என இன்று கொழும்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார இறுதி தினத்தையொட்டி நடந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ,
போதைப்பொருள் ஒழிப்பு பற்றி உங்களுக்கு தெரியும். அதை ஒழிக்கும்போது வெற்றி போல தடைகளும் வருகின்றன. போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நடந்த போது 9 மாகாணங்களிலும் இது வெற்றிகரமாக நடந்தது. 30 வருடம் யுத்தம் நடந்தது. போதைப்பொருள் விற்பனை தான் பிரபாகரனின் வருமானம்.உலகத்தில் உள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்கு தொடர்பு இருந்தது. உலக யுத்தம் போல உலகில் போதைப்பொருள் வர்த்தகமும் ஒரு தீவிரவாதம் தான்.
போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கினார். யுத்தம் நடத்தினார்.
போதைப்பொருள் ஒழிக்க வேண்டுமாயின் அமெரிக்கா முழுதும் மரணதண்டனை அமுலாக வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். போதைப்பொருள் ஒழிப்பில் எனக்கு 40 வருட அனுபவம் உள்ளது. நான் சிறிய பதவியில் இருந்து வந்தபோதே போதைப்பொருளுக்கு எதிராக செயற்பட்டேன்.
11 ஆயிரம் பேர் இருக்க வசதியுள்ள சிறையில் 24 ஆயிரம் பேர் உள்ளனர்.அவர்களில் 15 ஆயிரம் பேர் போதைப்பொருள் குற்றவாளிகள். இதில் பெண்கள் சிக்கியிருப்பது பரிதாபம். பெண்கள் கூடுதலாக பியர் , சிகரெட் , கஞ்சா , வைன் பாவிக்கின்றனர். சிகரெட் தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். வருடம்தோறும் 50 ஆயிரம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறை செல்கின்றனர்.இவர்களில் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
இன்று பாடசாலைகளில் இலவசமாக போதைப்பொருள் வழங்கப்படுகின்றன. அப்படி கொடுத்து அவர்கள் அடிமையான பின்னர் வர்த்தகத்திற்கு அவர்களை பலியாக்குகின்றனர். ஒரு இனத்தை அழிக்க சிறந்த பொருள்தான் இந்த போதைப்பொருள்.
அரசியலை ஆட்சியாளர்களை தீர்மானிப்பது போதைப்பொருள் வர்த்தகர்கள் .ஆனால் நாங்கள் அவற்றுக்கு அஞ்சவில்லை. பல நாடுகளில் இன்னும் மரணதண்டனை அமுலில் உள்ளது.

Recommended For You

About the Author: ஈழவன்