
நாட்டின் அனைத்து இடங்களிலும் உள்ள மதுபானசாலைகள் இம்மாதம் 25ஆம் திகதி மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையின்போது நாட்டில் சுமுகமான நிலை நிலவ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.