ரணில் கைது செய்யப்படலாம் ?

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை போன்று பிணைமுறி மோசடி தொடர்பாகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ரணில் விக்ரமசிங்கவும் கைது செய்யப்படுவாறென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சம்பிக்க ரணவக்க தொடர்பாக பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் செயற்பட்ட விதத்தின் அடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவும் இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மத்திய வங்கி மோசடி தொடர்பில் தேவையான அனைத்து தகவல்களும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதத்தின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க விரைவில் கைது செய்யப்படுவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்