ராஜித சேனாரத்ன நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20) முற்பகல் முன்னிலையானார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்வதை தவிர்த்துக்கொள்ளும் வகையில், முன் பிணை கோரி மனு ஒன்றை நேற்று (19) தாக்கல் செய்திருந்தார்.

குறித்த பிணை மனு மீதான வழக்கு விசாரணைக்காகவே அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தன்னை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு பொலிஸார் தயாராகி வருவதாக தனது மனுவில் ராஜித குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்