சுற்றுலா விடுதி இடிந்து விழுந்ததில் வெளிநாட்டவர்கள் படுகாயம்

பதுளை – எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்று இடிந்து விழுந்ததில் அங்கு தங்கியிருந்த 3 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் காயமடைந்த மூவரும் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இடிந்துவிழுந்த கட்டடம் குறித்து ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து கட்டட ஆய்வுப் பணிமனையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று அங்கு செல்லவுள்ளது.

மேலும் குறித்த கட்டடத்தின் நிர்மானப் பணிகள் உரிய முறையில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: ஈழவன்