ரயில் சேவைகள் தொடர்ந்தும் ஸ்தம்பிதம்

தெமட்டகொட மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தொடர்ந்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தெமட்டகொட மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று ரயில் தடம் புரண்டது. குறித்த பகதியில் ரயில் இயந்திரம் ஒன்றும் ரயில் பெட்டி ஒன்றும் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் மேலும் தெரிவித்தது.

இதன் காரணமாக பிரதான வீதியின் மற்றும் புத்தளம் வீதியின் ரயில் போக்குவரத்து தாமதமாகும் என ரயில்வே கட்டுப்பாட்டுமையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த ரயில் வழமைக்கு திரும்பாமை காரணமாக ரயில் சேவைகள் தொடர்ந்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்