
கிளிநொச்சியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 33 வயது இளைஞனுக்கும் கடந்த சித்திரை மாதம் இந்தியாவில் வைத்து திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் குறித்த இளைஞன் லண்டனுக்கும், பெண் கிளிநொச்சிக்கும் சென்ற நிலையில் சில நாட்கள் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இளைஞனுக்கு பெண்னின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது பின்னர் இருவரும் தொலைபேசியில் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இன் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள அறையொன்றில் தொலைபேசி காணொளி அழைப்பில் கணவன் பாத்திருக்க அவர் முன்னிலையில் தூக்கு போட்டுக்கொள்ள எத்தனித்திருந்த நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட, தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் பல இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.