
எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
‘தேசப்பாதுகாப்பு, நாட்டு நலனை மனதில் கொண்டு மக்கள் ஒற்றுமையுடன் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’
இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் மனத்திற்கு வேதனை அளிக்கின்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.