72 ஆவது தேசிய தின விழா சுதந்திர சதுக்கத்தில்

72ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் அடுத்த வருடம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள 72 ஆவது தேசிய தின விழாவின் நிகழ்ச்சி நிரலை வகுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரை தலைவராக கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்காக அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 72 ஆவது தேசிய தின விழா கொழுப்பு 07, சுதந்திர சதுர்க்கத்தில் நடத்துவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்