
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று(வியாழக்கிழமை) இந்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
கடந்த 3 மாத காலப்பகுதியில் 30 பேரிடம் குறித்த ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
மேலும் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து 65 பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 300 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தனர்.