கிளிநொச்சியில் விபத்து – முதியவர் பலி.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி 155ஆம் கட்டை ஏ9 வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது.

தனியார் நிறுவனமொன்றின் காவல் தொழிலாளியாக பணிபுரியும் குறித்த நபர் இன்று காலை பணிக்காக சைக்கிளில் பயணித்தவேளை, தென்னிலங்கையிலிருந்து யாழ். நோக்கி பயணித்த வானுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் காயமடைந்த குறித்த நபரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான சின்னையா சுப்ரமணியம் எனும் 73 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்