
வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உந்துருளிகளை எரியூட்டிய சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றது.
நேற்று புதன்கிழமை பரிஸ் முதலாம் வட்டாரத்தில் உள்ள rue Vauvilliers வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இங்குள்ள தரிப்பிடம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு ஸ்கூட்டர் வகை உந்துருளிகள் முற்றாக தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
அருகில் இருந்த கட்டிடத்தின் இரண்டாவது தளம் வரை கரும்புகை பரவியுள்ளது. தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்ததுடன், சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த பலசரக்கு கடை ஒன்று உடனடியாக மூடப்பட்டது.
இந்த தீ விபத்து சிகரெட் ஒன்றில் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.