நவிகோ பயனாளர்களுக்கு நஷ்ட்ட ஈடு வேண்டும்! – மாகாண முதல்வர் கோரிக்கை..!!

வேலை நிறுத்தம் இடம்பெற்ற நாட்களுக்கான நஷ்ட்ட ஈட்டினை நவிகோ பயனாளர்களுக்கு திருப்பியளிக்க வேண்டும் என மாகாண முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

இல்-து-பிரான்சின் போக்குவரத்து துறை தலைவரும் மாகாண முதல்வருமான Valérie Pécresse இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

டிசம்பர் 5 ஆம் திகதியில் இருந்து இதுவரை காலமான நாட்களுக்கு பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்கவேண்டும் எனவும், ஜனவரி 1 ஆம் திகதிக்குள் இந்த நஷ்ட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் SNCF மற்றும் RATP ஆகியவற்றை கேட்டுக்கொள்கின்றேன் என Valérie Pécresse தெரிவித்துள்ளார்.

ஓய்வூதிய வயது வரம்பு 62 இல் இருந்து 64 ஆக அதிகரிக்கப்பட்டது தொடர்பாக Valérie Pécresse தெரிவிக்கும் போது, நான் நினைக்கின்றேன் இது தொடர்பான தீர்க்கமான முடிவை சில காலங்களுக்கு தள்ளி வைக்கலாம் என தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor