பால்நிலை சுட்டி வரிசையில் இலங்கைக்கு பின்னடைவு!

2020ஆம் ஆண்டுக்கான பால்நிலை இடைவெளிச் சுட்டி வரிசையில் இலங்கை பின் தங்கியுள்ளது.

சர்வதேச பொருளாதார மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பட்டியலில் இலங்கை ஏற்கனவே வகித்திருந்த 110ஆம் இடத்திலிருந்து, 112ஆம் இடத்திற்கு பின்னோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2020ஆம் ஆண்டுக்கான பால்நிலை இடைவெளிச் சுட்டி வரிசையில் ஐஸ்லாந்து முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.

ஐஸ்லாந்தைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தை நோர்வேயும் மூன்றாம் இடத்தை பின்லாந்தும் கைப்பற்றியுள்ளன.


Recommended For You

About the Author: Editor