இலங்கைக்கு வரும் இந்திய கடற்படைத் தளபதி!!

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் நான்கு நாட்கள் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதற்கமைய அவர் இன்று (வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளாரென இந்திய கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியக் கடற்படைத் தளபதி, கொழும்பில் கடற்படைத் தளபதி மற்றும் ஏனைய படைத் தளபதிகள், அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 22ஆம் திகதி திருகோணமலை கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் மிட்சிப்மன் பயிற்சியை முடித்து வெளியேறும் அணிவகுப்பு நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.


Recommended For You

About the Author: Editor