மாத்தளை மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

மாத்தளை மாநகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 8 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மாநகர சபையின் மூன்று உறுப்பினர்கள் நேற்றைய தினம்(புதன்கிழமை) சபைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஒன்றிணைந்த முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே சபைக்கு சமூகமளிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது


Recommended For You

About the Author: Editor