கொழும்பில் மிகப்பெரிய வணிக வளாகம்!!

250 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வெளிநாட்டு முதலீட்டாளரால் வணிக வளாகம் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்தவகையில் குறித்த வணிக வளாகம் கொழும்பில் உள்ள பாலடக்ஸ மாவத்தை (Baladaksha Mawatha) ஒட்டி அமைந்துள்ள ஒரு நிலப்பரப்பில் அமைக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

இந்த கட்டிடம் 30 மாடி உயரம் கொண்டது என்றும் பல்பொருள் வளாக தொகுதிகளுடன் கூடுதலாக 700 சொகுசு குடியிருப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்த திட்டம் ஆறு ஆண்டுகளில் முடிக்கப்படம் என கூறினார்.

இந்த ஆண்டு நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தம் இந்த திட்டமாகும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor