கைக் குண்டு வைத்திருந்தவருக்கு 7 வருட சிறைத்தண்டனை!

கைக் குண்டொன்றை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட புலத் சிங்களயே ரொசான் பெரேரா எனும் ஆம் ரொசானுக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபெதிகே கடுமையான வேலையுடன் கூடிய ஏழு வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன், 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தையும் அவருக்கு விதித்துள்ளார். இதனை செலுத்தாதவிடத்து அவருடைய சிறைத் தண்டனை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இவர் கொஹுவல பொலிஸாரினால் கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கைக்குண்டொன்றுடன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor