நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சி தேசிய விளையாட்டரங்கில் இன்னும் சற்று முன்னர் (இலங்கை நேரப்படி 10.30 மணி)ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் அஸார் அலி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.

இப் போட்டிக்கு இரண்டு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உபாதைக்குள்ளான கசுன் ராஜித்தவுக்குப் பதிலாக இலங்கை அணியில் சுழ்பந்துவீச்சாளர்  லசித் எம்புல்தெனிய சேர்க்கப்பட்டுள்ளார்.

சுகவீனமுற்றுள்ள வேகப்பந்துவிச்சாளர் உஸ்மான் ஷின்வாரிக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியில் சுழல்பந்துவீச்சாளர் யாசிர் ஷா இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Milan Milan