
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
அதன்படி இடைக்கால அறிக்கையானது இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டாலும் ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் முழுமை பெறும் வரையில் தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.