
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று(வியாழக்கிழமை) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீண்டும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்களான சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலர் இதன்போது அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் நேற்றைய தினம் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்ததன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.