மிதக்கும் வர்த்தக சந்தைத் தொகுதி – மறுசீரமைக்க பிரதமர் உத்தரவு

புறக்கோட்டை மிதக்கும் சந்தைத் தொகுதியை விரைவில் மறுசீரமைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

103 வர்த்தகக் கடைத்தொகுதிகளைக்கொண்ட இந்த மிதக்கும் சந்தை, 312 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது. கடந்த அரசாங்க காலத்தில் இந்த கடைத் தொகுதி பராமரிக்கப்படாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது இதனை கவனத்திற்கொண்ட பிரதமர் இதுதொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

பராமரிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மெருகூட்டல் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான விடயங்களை நிவர்த்திக்கும் வகையில் இது மறுசீரமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)


Recommended For You

About the Author: Milan Milan