ட்ரம்ப்புக்கு எதிராக இம்பீச்மென்ற்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்கவேண்டும் அவருக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குற்றப் பிரேரணை (impeachment) முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்ப்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டினார் என்றும் அவருக்கு எதிராகச் சதிசெய்ய உக்ரைன் ஜனாதிபதியிடம் பேரம் பேசினார் என்றும் டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த சதித் திட்டத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கும் ட்ரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பிரேரணை பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை இரண்டிலும் வெற்றி பெற்றால் அவர் பதவியை இழக்க நேரிடும்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதிக்கு எதிராக பதவிநீக்க குற்றப் பிரேரணை கொண்டு வருவது, நாட்டின் மீதான அவமதிப்பு என்று தெரிவித்துளளார்.

மேலும் சபாநாயகர் நான்சி பெலோசிக்கு டொனால்ட் ட்ரம்ப் எழுதியுள்ள கடிதத்தில்;

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இன்று தீவிர இடதுசாரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளேன். ஆனால் உண்மையான ஜனநாயக வாதிகள் அவ்வாறு செய்யமாட்டார்கள். ஒரு ஜனாதிபதிக்கு எதிராக ஒருபோதும் இவ்வாறு நடக்கக்கூடாது. பிரார்த்தனை செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்


Recommended For You

About the Author: Editor