மன்னாரில் பிரதேசசபை தொழிலாளி மாயம்!

மன்னார் நானாட்டான் பிரதேச சபையில் கடமைபுரியும் வெளிக்கள தொழிலாளர் ஒருவர் கடமைக்கென வந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக முருங்கள் பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நானாட்டான் பிரதேச சபையில் கடமைபுரிந்து வரும் வெளிக்கள தொழிலாளரான 29 வயதான அன்ரனி விமாலட் என்பவர் கடந்த சனிக்கிழமை காலை கடமைக்கென நறுவலிக்குளத்திலுள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் அன்று வழமையான தனது கடமைக்கு வரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொழிலாளி வீடு திரும்பாததால் இது சம்பந்தமாக முருங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் இன்று புதன்கிழமை வரை கண்டு பிடிக்கப்படவில்லையென அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த நபர் இரண்டு மாதங்கள் முன்னரே திருமணமானவர் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் காணாமல் போன தொழிலாளையை தேடும்பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor