சிலாபத்துறையில் ஈரானியர் உள்ளிட்ட மூவர் கைது!!

சிலாபத்துறை கடற் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஈரானிய பிரஜை ஒருவரும் இலங்கை பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினர் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது , குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கிப் படகொன்றை அவதானித்து அதனை சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது, குறித்த படகில் ஈரானியர் ஒருவரும் இலங்கையர் ஒருவரும் இருந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது உரிய அனுமதி இல்லாமல் அவர்கள் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த டிங்கி படகுடன் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணையின்போது, சுற்றுலாப் பயணி வழிகாட்டியென தெரிவிக்கும் பிறிதொரு நபரிடமும் உரிய ஆவணங்கள் காணப்படாததால் அவரையும் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்

27, 31, 57 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையர்கள் இருவரும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக சிலாபத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: Editor